செய்ன் நதியின் நீச்சல் போட்டிகள் இரத்தாகுமா? நீரில் கிருமியா?
5 ஆவணி 2024 திங்கள் 16:35 | பார்வைகள் : 3630
செய்ன் நதியில் நடக்கும் நீச்சல் போட்டிகள் இரத்தாகக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
செய்ன் நதியில், த்ரியாத்லோன் போட்டிகளில் பங்கு பற்றிய பெல்ஜிய வீராங்கனை கிளேர் மிசேல் சுகவீனம் அடைந்ததால், தொடர்ச்சியான போட்டிகளில் பங்கெடுக்க முடியாது போயுள்ளது.
இவர் E.Coli எனும் பக்ரீரியா தாக்கத்தினால் வயிறு மற்றும் குடல் உபாதைகளிற்கு உள்ளாகி உள்ளார். இவரது அணியினர், செய்ன் நதியின் நீர் அசுத்தத்தினாலேயே கிளேர் மிசேல் நோய்க்கு உள்ளாகி உள்ளார் என, குற்றம் சாட்டி உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக பல பயிற்சிகள் செய்ன் நதியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.