Paristamil Navigation Paristamil advert login

7.000 வைன் போத்தல்கள் திருட்டு!!

7.000 வைன் போத்தல்கள் திருட்டு!!

6 ஆவணி 2024 செவ்வாய் 06:57 | பார்வைகள் : 12799


இன்று ஒரு 56 வயது நபரிற்கு இன்று திஜோன் (Dijon) நகரில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

பிரான்சின் பிரபல பேர்கோய்ன்  (Bourgogne) வைன் போத்தல்கள் திருட்டிற்காக இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 வருடங்களாக இவர் திருடிய வைன் போத்தல்களின் பெறுமதி அரை மில்லியன் அதாவது 500.000 யூரோக்களைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர் திருடிய சில Vosne-Romanée ரக வைன் போத்தல்கள் ஒல்வொன்றும் 1000 யூரோக்களைத் தாண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைன் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த இவர், கடைசியாக நான்கு வைன் போத்தல்களைத் திருடியமை கண்காணிப்புக் கமராவில் பதிவாகியது. இதனைத் தொடர்ந்து காவற்துறையினர் இவர் வீட்டில் நடாத்திய சோதனையில், பல்லாயிரக்கணக்கான வைன் போத்தல்கள் மீட்கப்பட்டன.

இன்று இவரிற்கான வழக்கு ஆரம்பமாக உள்ளது.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்