Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் நடக்கும் இடங்களில் சைபர் திருட்டும் மிரட்டலும்!!

ஒலிம்பிக் நடக்கும் இடங்களில் சைபர் திருட்டும் மிரட்டலும்!!

6 ஆவணி 2024 செவ்வாய் 07:32 | பார்வைகள் : 2170


ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் Grand Palais,  லூவ்ர் அருங்ககட்சியகம், மற்றும் பல அருங்காட்சியகங்களின் கணிணி சேமிப்பகங்கள், இலத்திரனியல் சைபர் தாக்குதலிற்கு உள்ளாக்கி உள்ளன.

இவற்றின் கணிணி சேமிப்பகங்களில் ஒரு ஊடுருவும் மென்பொருளை அனுப்பி அவற்றின் நிதி விபரங்கள் அனைத்தையும் திருடி உள்ளனர்.

இந்த சைபர் தாக்குதலில் ஈடுபட்டவர் பெரும் பணம் கோரி உள்ளதாகவும், அது தரப்படவிட்டால் அனைத்துத் தகவல்களும் பொதுமக்களிற்கு வெளியிடப்படும் எனவும் மிரட்டி உள்ளார்.

பிரெஞ்சு தேசிய த்  தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிறுவனமான Anssi (Agence nationale de la sécurité des systèmes d'information) இந்தத் தாக்குதல் சனிக்கிழமை இரவிற்கும் ஞாயிற்றுக்கிழமை இரவிற்கும் இடையில் நடாத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் தொடர்ச்சியான ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளிற்கு, எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்