Paristamil Navigation Paristamil advert login

மக்ரோனிற்குக் காலக்கெடு!!

மக்ரோனிற்குக் காலக்கெடு!!

6 ஆவணி 2024 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 7089


ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பெரும் வேகமெடுத்துச் செல்லும் நிலையில், பிரெஞ்சு அரசாங்கம் நிறுத்தத்தில், சிக்கலில்  உள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து, பராலிம்பிக் தொடங்க முதல் புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் மக்ரோன் உள்ளார். 

எதிர்வரும் 12ம் திகதி, அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தை எமானுவல் மக்ரோன் நடாத்த உள்ளார். இந்தத் திகதி அனைத்துக் கட்சிகளாலும் பெரும் கவனத்துடன் அவதானிக்கப்படுகின்றது.

ஒலிம்பிக் முடியும் வரை, காபாந்து அரசாங்கத்தைத் தொடர்ந்து வைத்திருப்பதை, «ஜனாநாயக மறுப்பு» என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டித்து வருவது, எமானுவல் மக்ரோன் நிலையைப் பெரும் சிக்கலிற்கு உள்ளாக்கி உள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்