வழமையை விட 1.2 மில்லியன் பயணிகள் அதிகமாக பயணித்த முதல் வாரம்..!!

6 ஆவணி 2024 செவ்வாய் 09:01 | பார்வைகள் : 6334
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த முதல் வாரம், வழமையை விட அதிகமாக 1.2 மில்லியன் பயணிகள் பரிசின் பொது போக்குவரத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக பல இலட்சம் வெளிநாட்டு பயணிகள் பரிசுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்பார்த்தபடியே முதல் வாரத்தில் வழமையை விட 1.2 மில்லியன் பயணிகள் மேலதிகமாக பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள், மெற்றோக்கள் மற்றும் RER உள்ளிட்ட தொடருந்து சேவைகளில் இந்த பயணிகள் பயணிதுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக போக்குவரத்து கட்டணம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.