Paristamil Navigation Paristamil advert login

EuroMillions : €109 மில்லியன் யூரோக்கள் வெற்றியீட்டிய பிரெஞ்சு நபர்

EuroMillions : €109 மில்லியன் யூரோக்கள் வெற்றியீட்டிய பிரெஞ்சு நபர்

2 புரட்டாசி 2023 சனி 11:06 | பார்வைகள் : 11149


இந்த வாரம் இடம்பெற்ற EuroMillions அதிஷ்ட்டலாப சீட்டிழுப்பில் பிரெஞ்சு நபர் ஒருவர் €109 மில்லியன் யூரோக்கள் பெரும்பணத்தை வெற்றியீட்டியுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த குலுக்கலில் 35, 3, 37, 5, 4 ஆகிய இலக்கங்களும், நட்சத்திர இலக்கமாக 5 மற்றும் 6 ஆகிய இலக்கக்கங்களை கொண்ட சீட்டுக்கு அதிஷ்ட்டத் தொகை கிடைத்துள்ளது.

மேற்படி அதிஷ்ட்டச்சீட்டினை கொண்டுள்ளவர் அடுத்து வரும் 60 நாட்களுக்குள் தனக்கான வெற்றித்தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் Hauts-de-Seine நபர் ஒருவர் நூறு மில்லியன் யூரோக்களை வெற்றி பெற்றிருந்தபோதும் அவர் அத்தொகையை பெறுவதற்கு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்