Paristamil Navigation Paristamil advert login

மார்செய் நகரில் அதிகரித்துள்ள துப்பாக்கிச்சூடு - இவ்வருடத்தில் 42 பேர் சுட்டுக்கொலை

மார்செய் நகரில் அதிகரித்துள்ள துப்பாக்கிச்சூடு - இவ்வருடத்தில் 42 பேர் சுட்டுக்கொலை

2 புரட்டாசி 2023 சனி 12:51 | பார்வைகள் : 6765


போதைப்பொருள் கடத்தல்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகத்தினால் மார்செய் (Marseille)  நகரில் இவ்வருடத்தில் 42 பேர்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் நேற்று செப்டம்பர் 1 ஆம் திகதிவரையான நாட்களில்இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு காரணமாக 93 வழக்குகளை அந்நகர அரசவழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகிறது. இவற்றில் புறநகர்அல்லாது மார்செயில் மட்டும் 89 வழக்குகள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது.

மொத்தமாக 42 பேர் சுட்டுக்கொல்லப்பட்டும், 109 பேர் காயமடைந்தும் உள்ளனர். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 32 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தநிலையில், இவ்வருடத்தில் துப்பாக்கிச்சூடுகளும், கொல்லப்பட்டவர்களின்எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்