Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் சிக்கியுள்ள வீரர்களை மீட்க செல்லும் நாசாவின் புதிய குழு!

விண்வெளியில் சிக்கியுள்ள வீரர்களை மீட்க செல்லும் நாசாவின் புதிய குழு!

7 ஆவணி 2024 புதன் 09:20 | பார்வைகள் : 1283


சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சென்ற இந்திய வமசாவளி பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்புவதில் தொடர்ந்தும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட வாயுக்கசிவு மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்குத் திரும்புவது இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த இரு விண்வெளி வீரர்களும் விண்வெளி ஆய்வு மையத்திலேயே தங்கியுள்ள நிலையில் அவர்கள் பூமிக்குத் திரும்பும் திகதி இதுவரையில் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 18ஆம் திகதி Crew 9 என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் கொண்ட குழுவை அனுப்புவதற்கு நாசா தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்