குடும்ப வன்முறையில் 118 பெண்கள் படுகொலை - உள்துறை அமைச்சகம் தகவல்
2 புரட்டாசி 2023 சனி 16:30 | பார்வைகள் : 7678
குடும்ப வன்முறை காரணமாக சென்ற ஆண்டில் 118 பெண்கள் தங்களது கணவர்அல்லது முன்னாள் கணவர்கள்/ காதலர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
சென்ற 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 118 பெண்களும், 27 ஆண்டுகளும் எனமொத்தமாக 145 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2021 ஆம்ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறிய அளவினால் குறைவாகும். 2022 ஆம்ஆண்டில் 114 பெண்களும், 25 ஆண்களும் என மொத்தமாக 139 பேர் குடும்பவன்முறையில் கொல்லப்பட்டிருந்தனர். மொத்தமாக 366 குடும்ப வன்முறைகள்பதிவாகியுள்ளன.
குடும்ப வன்முறையினால் பெண்கள் பாதிக்கப்படுவது (84%) அதிகமாகும். அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் பிரெஞ்சு மக்களாகும்.
கணவர், முன்னாள் கணவர், காதலன், மனைவி, முன்னாள் மனைவி என உறவில்ஏற்படும் விரிசலே இந்த வன்முறைகளுக்கு அடித்தளமாக அமைவதாக மேற்படிதகவலை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சகம் கவலை வெளியிட்டுள்ளது.