பாடசாலை உபகரணங்கள் புதிது வேண்டாம் பழசுகளே போதும்.
2 புரட்டாசி 2023 சனி 19:18 | பார்வைகள் : 9522
நாளை மறுதினம் 04/09/2023 France சில் புதிய கல்வியாண்டு ஆரம்பமாவுள்ளது. சுமார் 12 மில்லியன் (12 000 000) மாணவர்கள் இவ்வாண்டு பாடசாலைகளுக்கு திரும்பவுள்ளனர், மாணவர்களும், பெற்றோர்களும் மிகவும் பரபரப்புடன் ஆயத்த வேலைகளில் ஈடுபடுவதும், பாடசாலை உபகரணங்களை வாங்குவதுமாக காணப்படுகின்றனர்.
இவ்வாண்டு பாடசாலை உபகரணங்களின் விலைகள் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 11% சதவீதத்தால் அதிகரித்து இருக்கும் நிலையில், France சில் ஏற்கனவே எரிபொருள் விலையேற்றத்தால் வாழ்க்கை செலவுகளும் அதிகரித்து இருக்கின்றது.
இந்த மோசமான பணவீக்கம் காணப்படும் சூழலில் கூடுதலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு புதிய பாடசாலை உபகரணங்களை வாங்காமல் பழைய உபகரணங்களையே உபயோகிக்க முடிவு எடுத்துள்ளனர்.
இதனால் இவ்வாண்டு பாடசாலை உபகரணங்களின் விற்பனையில் 12.8% சதவீத பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வழமையாக கல்வியாண்டு ஆரம்பிக்கும் காலப் பகுதியில் விசேடமாக ஞாயிறு தினங்களில் திறக்கப்படும் பல்பொருள் அங்காடிகள் இவ்வாண்டு சாதாரணமான ஞாயிற்றுக்கிழமை போல் தங்கள் சேவைகளை மட்டுப்படுத்தி உள்ளன.