சிலையென நிற்கும் வெண்மேக சிற்பமே
8 ஆவணி 2024 வியாழன் 09:53 | பார்வைகள் : 1153
கோபக்காரியே...
மழைக்கண்டு ஓடி
ஒளியும் புள்ளிமானே...
உன்னை
மழையில் நினைத்ததால்...
என்மீது உனக்கு
இத்தனை கோபமோ...
தொப்பென நனைந்து...
சிலையென நிற்கும்
வெண்மேக சிற்பமே...
கவிந்த தலை நிமிர்ந்து
என்னை பாரடி...
கோடை மழையிலும்
வெயில் காயலாம்...
விடாமல் போடும் தூறல்
விட்டு விட்டு அடிக்கும் சாரல்...
தலை நிமிர்ந்து
கண்திறந்து ரசித்து பார்...
என் விரல் உன் காதோரம்
கோலமிடுவதையும் ரசித்துப்பார்...
என்னை போலவே இந்த
மழையும் உனக்கு புடிக்கும்...
பாலைவனத்தில்
நடை பயின்று...
மழை பிடிக்காது
என்றால் எப்படி...
கொஞ்சம்
ரசித்துப்பார் இன்று...
நாளைய புயலில் நீயே
நடனம் அரங்கேற்றுவாய்...
என் மழைமேக
கோபக்காரியே.....