நாக சைதன்யாவுக்கு சோபிதா உடன் நடந்த நிச்சயதார்த்தம்

8 ஆவணி 2024 வியாழன் 10:44 | பார்வைகள் : 7726
நாக சைதன்யா மற்றும் பிரபல நடிகை இடையே திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நாகசைதன்யா மற்றும் சமந்தா திருமணம் நடந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர்.
இதனை அடுத்து நாக சைதன்யா, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்த சோபிதா துளிபாலா என்பவருடன் டேட்டிங்கில் இருந்தார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று காலை இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் நாகார்ஜூனா உள்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இதுகுறித்து நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துளிபாலுக்கும் இன்று காலை 9:42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!! அவரை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள்! அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். அவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்! என்று பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து வருங்கால தம்பதிகளாக போகும் நாக சைதன்யா - சோபியாவுக்கு தெலுங்கு திரை உலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1