மூன்று நாட்களின் பின்னர் தங்கம் வென்ற பிரான்ஸ்..

9 ஆவணி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 7297
நேற்று ஓகஸ்ட் 8 ஆம் திகதி பிரான்ஸ் தங்கப்பதக்கம் ஒன்றினை பெற்றது. Men's Omnium எனும் ஆண்களுக்கான மிதிவண்டி ஓட்டப்போட்டியில் இந்த தங்கத்தினை பிரெஞ்சு வீரர்Benjamin Thomas பெற்றுக்கொண்டார்.
பரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் பெற்றுக்கொள்ளும் 14 ஆவது தங்கப்பதக்கம் இதுவாகும். மூன்று நாட்களின் பின்னர் தங்கப்பதக்கம் ஒன்றை பிரான்ஸ் பெற்றுக்கொள்கிறது. முன்னதாக ஓகஸ்ட் 5 ஆம் திகதி Surfing எனும் கடல் அலை சாகச விளையாட்டுக்காக 13 ஆவது தங்கத்தினை வென்றிருந்தது.
நேற்று ஓகஸ்ட் 8, வியாழக்கிழமை நாள் முடிவில் பிரான்ஸ் 14 தங்கம், 19 வெள்ளி, 21 வெண்கல பதக்கங்களுடன் மொத்தமாக 54 பதக்கங்களுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1