பரிசில் இருந்து புறப்படும் வீரர்களுக்கு விமான நிலையத்தில் நடனத்துடன் கூடிய பிரியாவிடை!

9 ஆவணி 2024 வெள்ளி 08:32 | பார்வைகள் : 6959
ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுநாள் ஓகஸ்ட் 11 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது. போட்டிகளை முடித்துக்கொண்டு புறப்படும் வீரர்களுக்கு நடனத்துடன் கூடிய பிரியாவிடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரியாவிடை நடனம் (une danse du départ) நிகழ்வு Orly மற்றும் Roissy ஆகிய இரு விமான நிலையங்களிலும் ஓகஸ்ட் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது. விமானத்தில் ஏற தயாராக இருக்கும் வீரர்களுக்கு முன்பாக நடனக்குழு ஒன்று நடனம் ஒன்றை ஆடுவார்கள். வீரர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பவும், பரிஸ் ஒலிம்பிக்கை மறக்கமுடியாததாக மாற்றவும் இது உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பயிற்சிகள் நேற்றைய தினம் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது. (புகைப்படத்தில் பார்க்கலாம்)
அதேவேளை, பரா-ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் நாளிலும் இந்த நடன நிகழ்வு விமான நிலையங்களில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.