'gummies' உட்கொள்வது அழகுக்கு ஆரோக்கியமானதா? உடலுக்கு ஆபத்தானதா?
3 புரட்டாசி 2023 ஞாயிறு 06:36 | பார்வைகள் : 5138
'gummies' உட்கொள்வது அழகுக்கு ஆரோக்கியமானதா? உடலுக்கு ஆபத்தானதா?
'உங்களின் சருமத்தை ஆரோக்கியமாக்க, உங்கள் கூந்தலை அழகாக்க, தூக்கமின்மையை துரத்த ஒரு புதிய ஊட்டச்சத்து இது,
' சருமத்தை, கூந்தலை அழகாக்க மருந்து எடுக்கிறோமே, தூக்கமின்மைக்கு மருந்து பாவிக்கின்றோமே' இதுபோன்ற மனோநிலையை மாற்றி 'இனிப்பு தான் உண்கிறோம் என்னும் மனோநிலையை தருவது 'gummies'
இவ்வாறான கவர்ச்சி கரமான விளப்பரங்களுடன் கடந்த 2020தில் அமெரிக்காவில் இருந்து France க்கு அறிமுகமானதுதான் 'gummies' என்னும் இனிப்புப் பண்டங்கள் போன்ற தோற்றத்திலும், பல்வேறுபட்ட சுவையிலும் கிடைக்கும் வில்லைகள்.
இந்த 'gummies' என்னும் வில்லைகளின் வியாபாரம் மருந்தகங்களில் இரண்டு ஆண்டுகளில் நான்கு மடங்காக அதிகரித்து களைகட்டியுள்ளது.
மூன்று வாரங்கள் இந்த இனிப்பு போன்ற வில்லைகளை நீங்கள் வாங்குவதற்கு 20€ euros செலவிட வேண்டும். இதன் சந்தை 2025ம் ஆண்டில் ஆறு பில்லியன் யூரோ க்களை எட்டும் என கணிப்பிடப்பட்டுள்ளது. முன்பு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'gummies' வில்லைகள் இன்று France சில் உள்ள ஆய்வு கூடங்களில் தயாரிக்கப்படுகிறது.
இந்த வில்லைகள் உண்மையில் சருமத்துக்கும், கூந்தலுக்கும், தூக்கமின்மைக்கும் ஆரோக்கியமானதா? என்னும் கேள்விக்கு பதிலளித்த ஊட்டச்சத்து நிபுணர் Mme HUBERT Dominique 'இவை தாவரங்களின், பழங்களின் சாறுகளினால் செய்யப்டுகிறது இதுவரை இது ஆரோக்கியமானது. வருங்காலங்களில் இரசாயனங்கள்,நிறமூட்டிகள் சேர்க்கப் பாடாமல் இருக்க வேண்டும்' என்கிறார்.
இந்த இனிப்பு வில்லைகள் சாதரணமான கடைகளில் விற்கப்படுவதில்லை (pharmacie) மருந்தகங்களில் மட்டுமே கிடைக்கிறது.