கனடாவில் பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் - 2 பேர் பலி
9 ஆவணி 2024 வெள்ளி 18:03 | பார்வைகள் : 1830
கனடாவில் பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பானத்தை அருந்திய 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 2 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக், ஆல்பர்ட்டா மற்றும் நோவா ஸ்கொஷியா ஆகிய நான்கு மாகாணங்களில் தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட பானம் ஒன்றில் லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பானத்தை அருந்திய 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 2 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ஒன்ராறியோவிலுள்ள Pickering என்னும் நகரில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட பானத்தில் இந்த கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய உணவு பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
Silk என்னு பிராண்ட் பெயர் கொண்ட almond milk, coconut milk, almond-coconut milk and oat milk மற்றும் Great Value பிராண்டின் almond milk ஆகிய பானங்களே பாதிக்கப்பட்டுள்ளன.