டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாதம்!
9 ஆவணி 2024 வெள்ளி 18:13 | பார்வைகள் : 2241
அமெரிக்காவில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இது தொடர்பில் டொனால்ட் டிரம்ப் தெரிவிக்கையில்,
விவாதங்களை நடத்துவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் விவாதங்களை எதிர் நோக்குகிறேன்.
ஏனென்றால் நமது சாதனை நேராக மக்களை சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறேன்' என்றார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக புதிதாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் டொனால்ட் டிரம்பை விட கமலா ஹாரிஸ் 5 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலா ஹாரிஸ் 42 சதவீதமும், டொனால்ட் டிரம்ப் 37 சதவீதமும் ஆதரவை பெற்றுள்ளனர்.