Paristamil Navigation Paristamil advert login

பரா-ஒலிம்பிக் நுழைவுச் சிட்டைகள் அமோக விற்பனை..!

பரா-ஒலிம்பிக் நுழைவுச் சிட்டைகள் அமோக விற்பனை..!

10 ஆவணி 2024 சனி 07:00 | பார்வைகள் : 5042


பரா-ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச் சிட்டைகள் தற்போது விற்பனையாகிவருகிறது. எதிர்பார்த்ததை விட அமோகமான விற்பனை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரா-ஒலிம்பிக் போட்டிகளுக்காக மொத்தமாக 2.5 மில்லியன் நுழைவுச் சிட்டைகள் விற்பனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் இதுவரை 1.2 மில்லியன் நுழைவுச் சிட்டைகள் விற்பனையாகியுள்ளன. போட்டிகள் ஆரம்பமாவதற்குள் அனைத்து நுழைவுச் சிட்டைகள் விற்பனையாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முன்னர் எந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் இல்லாதவாறு அதிகூடிய நுழைவுச் சிட்டைகள் பரிஸ் 2024 ஒலிம்பிக்கில் விற்பனையாகியிருந்தது. மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ள 10 மில்லியன் நுழைவுச் சிட்டைகளில் 9.5 மில்லியன் நுழைவுச் சிட்டைகள் விற்பனையாகியுள்ளன. இதற்கு முன்னதான சாதனையாக அட்லாண்டா போட்டிகளின் போது (1996 ஆம் ஆண்டு) 8.3 மில்லியன் நுழைவுச் சிட்டைகள் விற்பனையாகியிருந்தன.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்