பிரேசில் விமான விபத்J - 62 பேர் பலி

10 ஆவணி 2024 சனி 04:56 | பார்வைகள் : 10067
பயணிகள் விமானம் ஒன்று பிரேசிலில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிரேசிலின் சாவ் பாலோவில் (Sao Paulo) பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
விபத்தின் போது விமானத்தில் 58 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 62 பேரும் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
TV GloboNews ஒளிபரப்பிய காட்சிகளில், விமானத்தின் பெரும் பகுதியில் தீ பற்றி எரிவதையும், விமானத்தின் உட்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவதையும் பார்க்க முடிகிறது.
உள்ளூர் தீயணைப்பு படையினர், விமானம் Vinhedo நகரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த ATR-72 விமானமானது பரானா மாகாணத்தில் உள்ள Cascavel-விலிருந்து சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான Guarulhos நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1