Paristamil Navigation Paristamil advert login

'Panneaux solaires' சூரிய மின்சக்தி தட்டுக்கள் பொருத்தும் போது அவதானம் அரச உதவிகளை இழப்பீர்கள்.

'Panneaux solaires' சூரிய மின்சக்தி தட்டுக்கள் பொருத்தும் போது அவதானம் அரச உதவிகளை இழப்பீர்கள்.

3 புரட்டாசி 2023 ஞாயிறு 07:48 | பார்வைகள் : 2585


எரிபொருட்களின் விலையேற்றம், மின்சார கட்டண உயர்வு, போன்ற காரணங்களால் பிரான்ஸ் வாழ் மக்கள் 'panneaux solaires' சூரிய மின்சக்தி தட்டுக்களைப் பொருத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

2022ம் ஆண்டில் மட்டும் 500 000 வீடுகளுக்கு 'panneaux solaires' பொருத்தப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அரசாங்கமும் இதனை ஊக்கப்படுத்தி வருகின்றது.

குறைவான மின்சக்தியை பயன்படுத்தும் வகையிலான வீட்டுத் திருத்த வேலைகளுக்கும், 'panneaux solaires' போன்ற மின்சக்தியை உற்பத்தி செய்யும் திருத்த வேலைகளைச் செய்யும் வீடுகளுக்கும் ஊக்கத்தொகை வழங்க France அரசு தனது வரவுசெலவு திட்டத்தில் 9.1 பில்லியன் eurosக்களை ஒதுக்கியுள்ளது.

வருங்காலத்தில் அணுமின் நிலையங்களை படிப்படியாக மூடுவதே அரசின் திட்டமாகும். எனவே சூரியசக்தி மூலம் மின்சாரத்தை பெறுவதையும், குறைவான மின்சார சக்தியை பயன்படுத்துவதையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்த அரசின் திட்டத்தை பயன்படுத்தி பல நிறுவனங்கள் 'நாங்கள் 'panneaux solaires' பொருத்தித் தருகிறோம், நீங்கள் அரச உதவிகளை பெறமுடியும் ' என விளம்பரங்கள் செய்து பல போலியான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நீங்கள் 'panneaux solaires' பொருத்தும் முன்னர் குறித்த நிறுவனம் சரியான அங்கிகாரம் பெற்றது தானா? என்பதனை அறிந்து சரியான முறையில் செயல்படாமல் போனால் அரசின் உதவித்தொகை இழக்க நேரிடும் என எச்சரிக்கப் பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்