Paristamil Navigation Paristamil advert login

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பில் புதிய ஆய்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பில் புதிய ஆய்வு

3 புரட்டாசி 2023 ஞாயிறு 07:51 | பார்வைகள் : 5856


கொரோனா தொற்றானது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நோயாகும்.

இந்த தொற்றானது சற்று குறைந்து காணப்பட்டாலும் அதில் இருந்து இன்னும் முற்றாக மீள முடியாத நிலையில் உலக நாடுகள் நாட்களை கடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பான ஒரு சிறப்பு கண்டுபிடிப்பை அமெரிக்க ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளை அல்லது நுரையீரலில் இரத்தக் கட்டிகள் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளைக் காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,837 பேரைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகளில் 16% பேர் குறைந்தது 6 மாதங்களுக்கு சிந்திக்கவோ, கவனம் செலுத்தவோ அல்லது நினைவில் வைத்துக் கொள்ளவோ ​​சிரமப்பட்டுள்ளனர் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்