அனல் காற்று : 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
11 ஆவணி 2024 ஞாயிறு 06:28 | பார்வைகள் : 2358
இன்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பெரும்பான்மையான நகரங்களில் கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு நாளான இன்று, அதிகபட்சமாக 40°C வரை வெப்பம் நிலவலாம் எனவும், அனல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 25 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கையன செம்மஞ்சள் எச்சரிக்கையும், மொத்தமாக 58 மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட எச்சரிக்கையான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 35°C வரை வெப்பம் பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Landes, Gironde, Charente-Maritime, Charente, Côte-d'Or, Doubs, Jura, Saône-et-Loire, Allier, Puy-de-Dôme, Loire, Rhône, Ain, Haute-Savoie, Savoie, Isère, Drôme, Ardèche, Gard, Bouches-du-Rhône, Vaucluse, Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Corse-du-Sud மற்றும் Haute-Corse ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்று சனிக்கிழமை Cadenet (Vaucluse) நகரில் அதிகபட்சமாக 39.8°C வெப்பம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.