நோபல்பரிசு வழங்கும் விழா- பிரபல நாடுகளுக்கு அழைப்பு
3 புரட்டாசி 2023 ஞாயிறு 08:08 | பார்வைகள் : 14211
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல்பரிசு வழங்கும் விழாவில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு சுவீடனை சேர்ந்த பல எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து நோபல் பரிசு வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீதான போர் மற்றும் சுவீடன் நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யா எதிர்ப்பது ஆகியவை காரணமாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடும் எதிர்ப்பு காரணமாக நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷ்யா-பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு விடுத்த அழைப்பை நோபல் அறக்கட்டளை திரும்ப பெற்றுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan