Paristamil Navigation Paristamil advert login

முத்தையா முரளிதரன், வார்னேவுக்கு பின் சிறந்த Spinner அந்த பாகிஸ்தானியர் தான்: முன்னாள் வீரர் லாயிட்

முத்தையா முரளிதரன், வார்னேவுக்கு பின் சிறந்த Spinner அந்த பாகிஸ்தானியர் தான்: முன்னாள் வீரர் லாயிட்

11 ஆவணி 2024 ஞாயிறு 09:01 | பார்வைகள் : 646


பாகிஸ்தானின் அப்துல் காதர் தான் முரளிதரன், வார்னேவுக்கு பின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என இங்கிலாந்தின் முன்னாள் வீரர் டேவிட் லாயிட் தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட் உலகில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றி ஜாம்பவானாக திகழ்பவர்  இலங்கையின் முத்தையா முரளிதரன்.

அவருக்கு அடுத்த இடத்தில் (சுழற்பந்து வீச்சாளராக) அவுஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (708 விக்கெட்), இந்தியாவின் அனில் கும்ப்ளே (619 விக்கெட்), நாதன் லயன் (530 விக்கெட்) உள்ளனர். 

ஆனால், இவர்களில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டை வீழ்த்திய வீரர் அனில் கும்ப்ளே (Anil Kumble) மட்டும் தான். 

இந்த நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் வீரரான டேவிட் லாயிட் (David Lloyd) சிறந்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் முரளிதரன், வார்னேவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவராக பாகிஸ்தான் வீரர் ஒருவரை தான் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அனில் கும்ப்ளேவை சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்றும் கூறியுள்ளார். 

டேவிட் லாயிட் கூறுகையில், "பாகிஸ்தானின் அப்துல் காதர் ஒரு முழு கலைஞர். அவர் ஒரு அருமையான பந்துவீச்சாளர். அவரது rhytham மற்றும் அனைத்து Actionனும் சிறப்பாக இருக்கும். பந்துவீசும்போது காதரின் மணிக்கட்டு மிகவும் கீழே இருக்கும்.

எனவே, ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரனுக்கு பின் அவர் எனது பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். அதே சமயம் அனில் கும்ப்ளே உயரமானவர், வேகமாக வீசக்கூடியவர்.


அவர் கைகளை அதிகமாக பயன்படுத்துகிறார். அவரிடம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உண்டான ஒரு வளையம் இல்லை. அவருடைய பந்துகள் மிகவும் அதிக உயரத்தில் வருகிறது" என தெரிவித்துள்ளார். 

அப்துல் காதர் (Abdul Qadir) 67 டெஸ்ட்களில் 236 விக்கெட்டுகளும், 104 ஒருநாள் போட்டிகளில் 132 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்