Paristamil Navigation Paristamil advert login

பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் அடிமையாகிவிட்டேன்... வழக்குத் தொடர்ந்த கனேடியர்

பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் அடிமையாகிவிட்டேன்... வழக்குத் தொடர்ந்த கனேடியர்

11 ஆவணி 2024 ஞாயிறு 09:29 | பார்வைகள் : 353


பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாட்டில் இருந்து மீள முடியவில்லை, அடிமையாகிவிட்டேன் என குறிப்பிட்டு கனடாவின் Montreal பகுதியை சேர்ந்த இளைஞர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தற்போது 24 வயதாகும் அந்த நபர் கடந்த 2015 முதல் TikTok, YouTube, Reddit, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருவதாகவும், இதனால் உற்பத்தித்திறன் மற்றும் உடல் உருவத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், நாளுக்கு 4 மணி நேரம் சமூக ஊடக செயலிகளை பயன்படுத்தி வந்ததாகவும், ஆனால் அதன் தாக்கத்தில் இருந்து விடுபடும் பொருட்டு, 2 மணி நேரமாக குறைத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தமது உற்பத்தித்திறன் மற்றும் தூக்கத்தில் அதன் தாக்கம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

2024ல் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், ஒட்டுமொத்தமாக 500 மில்லியன் ஆண்டுகளுக்கான சமூக ஊடக பயன்பாட்டினை மனிதகுலம் பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதனால், இது தனியொருவருக்கான பிரச்சனை அல்ல, இது பலருக்குமான பரவலான பிரச்சனை என்றும் அந்த நபருக்கான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 

மேலும், 7 முதல் 11 வயது வரையான 52 சதவிகித கனேடிய சிறார்கள் சமூக ஊடக பயன்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும்,

அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் பயனர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சமூக ஊடகங்கள் அனைத்தும் தற்போது பயனர்களின் உளவியல் பலவீனங்களை பயன்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்ளும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும், நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அன்றாட வாழ்க்கையில் அதன் பாதிப்பு இருக்கும் என்றும் அந்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்