Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சமந்தாவுக்கு இரண்டாவது திருமணமா?

 சமந்தாவுக்கு இரண்டாவது திருமணமா?

11 ஆவணி 2024 ஞாயிறு 09:31 | பார்வைகள் : 7507


நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களின் திருமணம் 2017-ம் ஆண்டு கோவாவில் செம்ம கிராண்ட் ஆக நடந்தது. திருமணத்துக்கு பின் நான்கு ஆண்டுகள் ஜாலியாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2021-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. நாக சைதன்யா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் சமந்தா.

விவாகரத்து ஆன அடுத்த ஆண்டே தன்னுடைய காதல் லீலைகளை ஆரம்பித்தார் நாக சைதன்யா. அவர் வீசிய வலையில் நடிகை சோபிதா துலிபாலா விழுந்துவிட்டார். இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்து வந்தனர். வெளிநாட்டிலும் ஜோடியாக உலா வந்த அந்த ஜோடியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இதுபற்றி வாய்திறக்காமலே இருந்த நாக சைதன்யா - சோபிதா துலிபாலா ஜோடி கடந்த வாரம் திடீரென நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு பின்னர், சோபிதா துலிபாலா பற்றிய பல்வேறு ஷாக்கிங் தகவல்கள் வெளிவந்தன. அவர், நாக சைதன்யாவுடன் தொடர்பில் இருந்ததை அறிந்த பின்னர் தான் சமந்தா விவாகரத்து பெற்று பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு பக்கம் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்தால் செம்ம ஹாப்பியாக இருக்கும் நிலையில், தற்போது நடிகை சமந்தா தனக்கு இன்ஸ்டாவில் வந்த மேரேஜ் புரபோசலுக்கு ரிப்ளை செய்திருக்கிறார்.

அதில் சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர், சமந்தாவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தால் அதில் நானும் ஒருவன், அவருக்கு 10 ரசிகர்கள் இருந்தாலும் அதில் நானும் ஒருவன், ஒரே ஒரு ரசிகன் இருந்தாலும் அது நானாக தான் இருப்பேன். இந்த உலகமே சமந்தாவுக்கு எதிரானது என்றால் நான் இந்த உலகத்துக்கு எதிரானவன். சமந்தா நீங்கள் பீல் பண்ண வேண்டாம். உங்களுக்காக நான் இருக்கிறேன். விருப்பப்பட்டால் திருமணம் செய்துகொள்வோம் என பேசி இருக்கிறார்.

ரசிகரின் இந்த அன்பை பார்த்து நெகிழந்து போன நடிகை சமந்தா, அதற்கு ரிப்ளையும் செய்துள்ளார். அதில், உங்கள் பின்னணியில் உள்ள ஜிம் என்னை கிட்டத்தட்ட சம்மதிக்க வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். முன்பெல்லாம் இரண்டாம் திருமணமே வேண்டாம் என கூறி வந்த சமந்தா தற்போது அதன்மீது தனக்கு விருப்பம் இருப்பதை இந்த பதிவின் மூலம் சூசகமாக வெளிப்படுத்தி இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்