Paristamil Navigation Paristamil advert login

வெண்புள்ளி தொடர்பான கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

வெண்புள்ளி தொடர்பான கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

11 ஆவணி 2024 ஞாயிறு 09:37 | பார்வைகள் : 881


வெண்புள்ளி (விட்டிலிகோ) என்பது ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு ஆகும். இது சருமத்தின் நிறமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. இது உலக மக்கள் தொகையில் 1-2 சதவிகிதம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வெண்புள்ளி பற்றி நிலவும் பொதுவான உண்மைகள் : 

இது உலக மக்கள்தொகையில் 1-2% பேரை மட்டுமே பாதிக்கும் அரிதான தோல் நோயாகும்.

இது அரிதான நோயாக இருந்தாலும், பாதிக்கப்படுபவர்களின் முழு வாழ்க்கையையும் மாற்றும் திறன் கொண்டது.

சிலர் தைரியம், நேர்மறை எண்ணம் மற்றும் சுயமரியாதையுடன் தங்கள் நிலையில் சிறந்து விளங்கினாலும்; மற்றவர்கள் தங்களது உடல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள சிரமப்படுகிறார்கள்.

தோல் அதன் நிறமி செல்களை (மெலனோசைட்டுகள்) இழக்கும்போது வெண்புள்ளி ஏற்படுகிறது. இது ஒரு தொற்று அல்லது பரம்பரை நோய் அல்ல. எந்த வயதிலும் இது ஏற்படலாம்.

வெண்புள்ளியின் வளர்ச்சியில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது. வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட உறவினர்களுடன் இருப்பவர்களுக்கு இந்த நிலை உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

இது உயிருக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது. ஆனால் தோல் அரிப்பு, நிறமாற்றம் போன்ற அறிகுறிகள் தென்படுவதால் இதன் விளைவுகளை குறைக்க உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

நோய்க்கான மூலக் காரணம், தோல் அதன் நிறமி செல்களை (மெலனோசைட்டுகள்) இழப்பதாகும். இது உலகெங்கிலும் உள்ள எந்த இனத்தவருக்கும் ஏற்படலாம். கருமை நிறம் கொண்ட, லேசான அல்லது பழுப்பு அல்லது வெள்ளை நிற தோல் நிறத்தில் உள்ள அனைவருமே வெண்புள்ளிக்கு சமமாக பாதிக்கப்படுகிறார்கள். இதில் எந்த நிற பேதமும் இல்லை.

லாக்டோஸ் தொடர்பான பொருட்களால் வெண்புள்ளி ஏற்படுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இது ஒரு தன்னியக்க நோயெதிர்ப்புக் கோளாறு ஆகும். இதற்கும் ஒருவர் உண்ணக்கூடிய பொருட்களுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் அவர்களின் நிலையைப் பரிசோதிக்க சான்றளிக்கப்பட்ட நிபுணர்களால் மட்டுமே முடியும். இதற்கு பக்கவிளைவுகள் இல்லாத பாரம்பரிய சிகிச்சை முறையான ஆயுர்வேதம் ஒரு சிறந்த சிகிச்சை முறையாகும். வெண்புள்ளி நோயாளிகளுக்கு பாப்சி எண்ணெய், கைஷோர் குங்குலு மற்றும் ஆரோக்கியவர்த்தினி மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது குடும்பம் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களை ஒருபோதும் மற்றவர்களிடமிருந்து தாழ்வாகவோ அல்லது வித்தியாசமாகவோ உணர வைக்கக்கூடாது. ஏனெனில் இது அவர்களை வெளியேற்றுவதற்கான ஆரம்ப படியாகும். உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, செம்பு க்ளாஸில் தண்ணீர் பருகுவது மற்றும் இஞ்சி சாறு குடிப்பது போன்ற வீட்டு வைத்தியங்கள் வெண்புள்ளி சிகிச்சையில் சிறந்த பயனைத் தரும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்