Paristamil Navigation Paristamil advert login

 அதிபயங்கர வெற்றிட குண்டுகளை பயன்படுத்தும் ரஷ்யா - அதிர்ச்சி தகவல்

 அதிபயங்கர வெற்றிட குண்டுகளை பயன்படுத்தும் ரஷ்யா - அதிர்ச்சி தகவல்

11 ஆவணி 2024 ஞாயிறு 09:49 | பார்வைகள் : 1516


உக்ரைன் - ரஷ்யா போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக உக்ரைனிய தரைப்படை மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட ஆயுதப் படை வீரர்கள் சர்வதேச எல்லையை கடந்து சுமார் 30 கிலோ மீட்டர் வரை ரஷ்ய நாட்டின் பரப்பளவுக்குள் உட்புகுந்துள்ளனர்.

உக்ரைனிய படையின் சுமார் 1000 வீரர்கள் வடகிழக்கு உக்ரைனின் சுமி பிராந்திய பகுதியில்(Sumy Oblast region) இருந்து முன்னேறி ரஷ்யாவின் குர்ஸ்க்(Kursk) பிராந்திய பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

உக்ரைனிய படைகளின் ஊடுருவலை உடனடியாக தடுக்க ரஷ்யா அவசரகால நிலையை பிரகடனம் செய்து இருப்பதோடு, தனது நாட்டு வீரர்களையும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரட்டியுள்ளது.

இந்நிலையில் மனிதர்களை ஆவியாகக்கூடிய வெற்றிட குண்டுகளை ரஷ்யா பயன்படுத்துவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா வழங்கிய தகவலில், எதிரிகளின் ஊடுருவலை கட்டுப்படுத்த தெர்மோபரிக் குண்டுகளை(thermobaric bomb) பயன்படுத்தி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.

ரஷ்ய பகுதிகளில் உக்ரைனின்  எதிர்பாராத தாக்குதலுக்கு பிறகு,  குர்ஸ்க்(Kursk) பிராந்திய பகுதியில் இன்னும் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊடுருவிய உக்ரைனிய படைகளுக்கு எதிராக ரஷ்யா வான் தாக்குதல் நடத்தி வருவதோடு, இந்த வான் தாக்குதலில் தெர்மோபரிக் குண்டுகள்(thermobaric bomb) என அறியப்படும் வெற்றிட குண்டுகளை(vacuum bomb) ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.

இந்த வெற்றிட குண்டுகளின் கூடுதலான சூடான அழுத்தம் மனித உடல்களை ஆவியாக்க கூடிய திறன் கொண்டது. என்பது குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்