Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது

11 ஆவணி 2024 ஞாயிறு 10:00 | பார்வைகள் : 5188


இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகள் ஆகியவற்றுடன் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு - தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 40 முதல் 45 வயதுக்குட்பட்ட வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில், துபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின்   விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது, அவர்களது பயணப்பைகள் அதிகாரிகளால் சோதனையிடப்பட்டது.

அவ்வேளை மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் கண்டெடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டடுள்ளனர்.

இதனையடுத்து, கைதான மூவரையும்; மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து, சுங்கத்துறை அதிகாரி சோதனை நடத்தியதன் பின்னர் கையடக்க தொலைப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்