வெப்பம் : இல் து பிரான்சின் மாவட்டங்கள் உட்பட 45 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை..!!
12 ஆவணி 2024 திங்கள் 06:00 | பார்வைகள் : 2202
தலைநகர் பரிஸ் மற்றும் அதனை சூழ உள்ள இல் து பிரான்சின் மாவட்டங்கள் உட்பட நாட்டின் 45 மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவக்கூடும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் இன்று 36 தொடக்க. 38°C வரையான வெப்பம் நிலவலாம் எனவும், அதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் 40°C வரை அல்லது அதற்கு மேலாகவும் வெப்பம் பதிவாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Landes, Gironde, Charente-Maritime, Charente, Corse-du-Sud, Haute-Corse, Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Bouches-du-Rhône, Vaucluse, Gard, Drôme, Ardèche, Isère, Savoie, Haute-Savoie, Rhône, Loire, Puy-de-Dôme, Doubs, Jura, Ain, Saône-et-Loire, Allier, Côte-d'Or, Yonne, Loiret, Loir-et-Cher, Eure-et-Loir, Aube, Marne, Aisne, Oise, Yvelines, Val-d'Oise, Essonne, Val-de-Marne, Seine-et-Marne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Paris, Paris, Nièvre, Cher, Indre மற்றும் Indre-et-Loire ஆகிய மாவட்டங்களுக்கு இந்த செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.