Paristamil Navigation Paristamil advert login

பணத்துக்கு யார் பொறுப்பு; ஏன் இன்னும் ராஜினாமா பண்ணலை: ராகுல் சரமாரி கேள்வி

பணத்துக்கு யார் பொறுப்பு; ஏன் இன்னும் ராஜினாமா பண்ணலை: ராகுல் சரமாரி கேள்வி

12 ஆவணி 2024 திங்கள் 03:26 | பார்வைகள் : 5059


முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

அதானி குழுமம் முறைகேடு செய்வதற்காக பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், 'செபி'யின் தலைவர் மதாபி புரி புச் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருந்ததாக 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் குற்றச்சாட்டை தெரிவித்திருந்த நிலையில், 'இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; உள்நோக்கம் உடையவை' என, செபி தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்து உள்ளது.

பங்குச்சந்தை

இந்நிலையில், சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். போட்டி நடுவர் முடிவெடுக்கும் போது தவறு செய்கிறார் என்பது, போட்டியைப் பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும், போட்டியை விளையாடுபவர்களுக்கும் தெரிகிறது.
அப்படியென்றால், அந்த போட்டி என்னவாகும்? போட்டியின் நேர்மை மற்றும் முடிவு என்னவாக இருக்கும்? இது தான் இந்திய பங்குச்சந்தையில் நடக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய பங்குச் சந்தைக்கு ஆபத்து இருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமை.

ராஜினாமா செய்யாதது ஏன்?

செபி தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடியா? செபி தலைவரா? அல்லது இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்குமா?

பார்லி கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என இப்போது புரிகிறது. சில்லறை முதலீட்டாளர்களின் செல்வத்தைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்ட செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கேள்விக்கு ஆளாகியுள்ளது. இவ்வாறு ராகுல் கூறினார்.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்