Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் தாமதமடைந்த இலங்கை - இந்திய கப்பல் சேவை 

மீண்டும் தாமதமடைந்த இலங்கை - இந்திய கப்பல் சேவை 

12 ஆவணி 2024 திங்கள் 14:59 | பார்வைகள் : 7148


தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு முன்னெடுக்கப்படவிருந்த பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு குறித்த பயணிகள் கப்பல் சேவை மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த கப்பல் சேவையில் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையத்தளத்தில் கப்பல் சேவை காலவரையறை இன்றி தாமதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு மற்றும் சீரற்ற காலநிலை என்பவற்றின் காரணமாக 'சிவகங்கை' கப்பல் சேவை தாமதமடைந்துள்ளதாக அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்