Paristamil Navigation Paristamil advert login

உடல் எடையை குறைக்க வீட்டிலேயே என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உடல் எடையை குறைக்க வீட்டிலேயே என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?

12 ஆவணி 2024 திங்கள் 15:17 | பார்வைகள் : 580


தற்போது உடல் எடையை அதிகரித்தல் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கம் காரணமாக பலரும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே நமது உடல் எடையை குறைத்து பிட்டாக வைத்து கொள்ள முடியும். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

நீரேற்றம் : முதலில் உடலில் உள்ள நீர்ச்சத்தை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதற்கு போதுமான அளவு தண்ணீர் அருந்தி உங்களை நீரேற்றமாக வைத்து கொள்ளுங்கள் . இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். எனவே எந்த ஒரு உடற்பயிற்சி செய்யும் முன்னரும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். தண்ணீருக்கு பதிலாக குளுக்கோஸ், இளநீர், பழச்சாறுகள் என அருந்தலாம்.

படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள் : வீடுகள், அலுவலகம் என எங்கு சென்றாலும் லிப்ட், எக்ஸலேட்டர்களுக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் தொடைகளில் உள்ள கொழுப்பை எரிக்க முடியும். இதனால் உங்கள் இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள தேவைற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை சீராக இருக்கும்.

உணவு கட்டுப்பாடு : உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கார்போஹட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்த்து விட்டு புரதம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். உங்களது தினசரி உணவு பட்டியலில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், தினமும் ஏதேனும் ஒரு வகையான பயறு வகைகளை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

ஸ்குவாட்ஸ் : ஸ்குவாட்ஸ் என்பது அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு அடிப்படையான உடற்பயிற்சி ஆகும். ஸ்குவாட்ஸ் பயிற்சி ஒட்டுமொத்த உடலுக்கும் மிகச்சிறந்த பயிற்சி என்று சொல்லலாம். இது தசை வலிமையை மேம்படுத்தி, செயல்திறனை வேகப்படுத்த உதவி செய்யும். இதில் வெயிட்டடு ஸ்குவட்ஸ், ஃபிளைமெட்ரிக் ஸ்குவாட்ஸ் என அவரவர் தேவைக்கேற்ப முயற்சி செய்யலாம்.

சைக்கிள் ஓட்டுதல் : சைக்கிள் ஓட்டுதல் என்பது உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் ஒரு அற்புதமான பயிற்சியாகும். சைக்கிள் ஓட்டுவதால் தொடையின் தசைகளை வலுப்படுத்தவும் மற்றும் இயற்கையான முறையில் தொடை கொழுப்பை குறைக்கவும் முடியும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் அரை மணி நேரமாவது சைக்கிள் ஓட்டுவது நல்லது.

நடைப்பயிற்சி : தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவும். உணவு உண்ட பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளுமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் நமது உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் இருக்கும். மேலும் தினமும் எட்டு வடிவ நடைப்பயிற்சி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்க வல்லது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்