காட்டுத்தீயில் சிக்கிய Grèce : உதவிக்கரம் நீட்டிய பிரான்ஸ்..!

12 ஆவணி 2024 திங்கள் 15:35 | பார்வைகள் : 5076
கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத் தீ காரணமாக பல நூறு ஹெக்டேயர்கள் காடு தீக்கிரையாகியுள்ளது. காட்டுத் தீ 25 மீற்றர் உயரம் வரை விளாசி எரிந்துவருகிறது. ஆயிரக்கணக்கான தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பிரான்ஸ் ஒரு சில உதவிகளை கிரீஸ் நாட்டுக்கு வழங்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார். மீட்புக்குழுவினர், தீயணைப்பு படையினர், மருத்துவக்குழுவினர் என மொத்தம் 180 பேர் கொண்ட குழு ஒன்று கிரீஸ் நோக்கி புறப்பட்டுள்ளது.
அங்கு பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருகளை ஏற்றிக்கொண்டு 55 பார ஊர்திகள் பிரான்சில் இருந்து புறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.