சோலார் புயல்.. இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்த வானம்..!

13 ஆவணி 2024 செவ்வாய் 07:24 | பார்வைகள் : 8238
பிரான்சின் கிழக்கு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு வானம் இளம் சிவப்பு வண்ணத்தில் காட்சியளித்தது.
சோலார் புயல் எனப்படுவது சூரியனில் இருந்து வெளியேறும் துகள்கள் பூமியைச் சூழ உள்ள காந்தப்புலத்தை சீர்குலைக்கும் போது ஏற்படுவதாகும். இதனால் வானம் மெல்லிய பச்சை அல்லது இளஞ்சிவப்பு போன்ற வண்ணங்களில் காட்சியளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு பிரான்சின் Brittany இல் இருந்து Haute-Savoie வரையான பகுதி முழுவதுமான வானத்தில் வண்ணப்பூச்சு அடித்தாற்போல் காட்சியளித்தது.
பலர் இந்த கண்கொள்ளாக்காட்சியை புகைப்படங்களாக பதிவேற்றினர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025