Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டனின் மரணம்!  மனைவி  அதிர்ச்சி தகவல்

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டனின் மரணம்!  மனைவி  அதிர்ச்சி தகவல்

13 ஆவணி 2024 செவ்வாய் 08:03 | பார்வைகள் : 2677


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கிரஹாம் தோர்ப் மரணமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

55 வயதான கிரஹாம் தோர்ப் இந்த மாத தொடக்கத்தில் மரணமடைந்தார். ஆகஸ்டு 5ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், தோர்ப் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவரது மனைவி தற்போது தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக அவர் கவலை மற்றும் மனச்சோர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது மனைவி அமண்டா தெரிவித்துள்ளார். மனைவி மற்றும் இரண்டு மகள்களால் அன்புடன் கவனிக்கப்பட்டும், அவரால் அந்த பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை.

சமீப மாதங்களில் அவர் மிக மோசமாக பதிக்கப்பட்டிருந்தார். மேலும் அவரில்லாமலே மனைவியும் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என அவர் நம்பியதாகவும் அமண்டா தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது நிலையும் எடுத்த முடிவும் தங்களை மொத்தமாக நொறுக்கியுள்ளது என அமண்டா தெரிவித்துள்ளார். கவலை மற்றும் மனச்சோர்வு காரணமாக அவர் கடந்த 2022 மே மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதன் காரணமாக தீவிர சிகிச்சையில் பல காலம் நீடிக்கும் நிலை உருவானது. அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருந்ததாகவும், ஆனால் அவர் தொடர்ந்து அவஸ்தைப்பட்டு வந்தார் என்றே அமண்டா தெரிவித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்