Paristamil Navigation Paristamil advert login

விஜயின் 70வது படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

விஜயின் 70வது படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

13 ஆவணி 2024 செவ்வாய் 08:09 | பார்வைகள் : 748


தமிழ் சினிமாவின்  பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கோட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்‘கோட்’ படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

விஜயின் ‘கோட்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி உலகளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.தவெக கட்சி தலைவராக பொறுப்பு வகிக்கும் நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை டார்கெட்டாக வைத்து விரைவில் முழு நேர மக்கள் பணியில் ஈடுபட உள்ளார்.

இதனால் நடிகர் விஜய் சினிமாவை விட்டு முற்றிலுமாக விலக முடிவெடுத்துள்ளார். இதனால் அவரின் கடைசி படம் எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த நிலையில், விஜய் தனது அடுத்த படமான தளபதி 69 படத்தில் நடிக்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

“விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அது அரசியல் சார்ந்த படமாகத்தான் இருக்கும்” என்று நேர்காணல் ஒன்றில் எச் வினோத் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தளபதி 69 படம் அரசியல் கான்செப்ட் தான் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகிறது.


மேலும், தளபதி 69 மற்றும் தளபதி 70 படத்தில் நடிகர் விஜய் நடிப்பது உறுதி என்றும், அதில் தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்குவது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. பேக் டூ பேக் தளபதி 69 மற்றும் 70 படத்தில் நடிக்கவுள்ள விஜயின் 70வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் தெரியுமா?

விஜய் நடிக்கவுள்ள தளபதி 70 படத்தை இயக்குனர் மாup செல்வராஜ் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகிவருகிறது. இதுகுறித்த உறுதியான தகவல்கள் எதுவும் தற்போதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்