Paristamil Navigation Paristamil advert login

வேற லெவல் பரிணாமத்தில் சூரியின் நடிப்பு..

வேற லெவல் பரிணாமத்தில் சூரியின் நடிப்பு..

13 ஆவணி 2024 செவ்வாய் 08:12 | பார்வைகள் : 683


சூரி நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘கொட்டுக்காளி’ என்ற திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திரையரங்கில் வெளியாகும் முன்னரே பல சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ‘கொட்டுக்காளி’ திரைப்படம் சில விருதுகளையும் வென்று உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான இந்த படத்தின் டிரைலரில் சூரியின் மாறுபட்ட நடிப்பை பார்க்க முடிகிறது.

குறிப்பாக ’விடுதலை’ ’கருடன்’ ஆகிய திரைப்படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகளில் அசத்திருந்த சூரி முற்றிலும் வித்தியாசமாக ஒரு கிராமத்து மனிதராக நடித்துள்ளார் என்று கூறுவதை விட வாழ்ந்துள்ளார் என்று கூறினால் நிச்சயம் மிகையாகாது. இந்த படத்தில் சூரியன் நடிப்பை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த ட்ரைலரின் முதல் காட்சியில் ஒரு கல்லில் சேவல் கட்டி போட்டு இருக்கும் நிலையில் அதன் அருகில் நாயகி உட்கார்ந்திருக்கும் காட்சி உள்ளது. சேவலை கட்டி வைத்தது போல் தான் பெண்களையும் இந்த சமூக கட்டி வைத்துள்ளது, சேவலுக்கு இருக்கிற சுதந்திரம் தான் அந்த பெண்ணுக்கும் உள்ளது என்பதை வசனமே இல்லாமல் காட்சிப்படுத்தி உள்ளது இயக்குனர் வினோத் ராஜின் திறமையை வெளிப்படுத்தும் காட்சிகளில் ஒன்றாக காணப்படுகிறது.