பரிஸ் : காணாமல் போன ஒலிம்பிக் பெண் ஊழியர்.. சடலமாக மீட்பு!

13 ஆவணி 2024 செவ்வாய் 09:47 | பார்வைகள் : 6896
ஒலிம்பிக் போட்டிகளின் போது கடமையாற்றியிருந்த பெண் ஊழியர் ஒருவர், ஒலிம்பிக்கின் நிறைவு நாள் நிகழ்ச்சியின் பின்னர் காணாமல் போயிருந்தார். அவர் தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
21 வயதுடைய குறித்த இளம் பெண், நேற்று திங்கட்கிழமை இரவு பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது கழுத்தில் காயம் இருந்ததாக தடயவியல் பிரிவினர் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சியில் கடமையாற்றியிருந்தார் எனவும், அதன் பின்னர் அவர் காணமல் போயிருந்ததாகவும், தெரிவிக்கப்பட்டது.
சடலம் மீட்கப்பட்ட அதே வீட்டில் இருந்து அரை மயக்கத்தில் ஆண் ஒருவர் மீட்கப்பட்டார். அவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.