Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் -ஈரானின் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் -ஈரானின் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா

13 ஆவணி 2024 செவ்வாய் 09:56 | பார்வைகள் : 6330


மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவும் சூழலில், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நிகழ்த்தலாம் என வெளியாகியுள்ள தகவல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஆக, இஸ்ரேல் மீதான தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேல் மட்டுமின்றி, அதன் ஆதரவு நாடான அமெரிக்காவும் தயாராகிவருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளரான John Kirby தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்திலேயே ஈரான் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பது தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஈரான் தாக்குதல் குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

குறிப்பிடத்தக்க அளவிலான தாக்குதல் என எதிர்பார்க்கப்படும் ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகவேண்டும் என Kirby தெரிவித்துள்ளார்.

அப்படி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும்பட்சத்தில், அது பெரிய போராக வெடிக்கும் அபாயம் உள்ளது.


ஆகவே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை நிறுத்துமாறு அமெரிக்கா ஈரானை கேட்டுக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்