Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இந்திய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இந்திய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

3 புரட்டாசி 2023 ஞாயிறு 11:09 | பார்வைகள் : 4026


இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இந்திய உணவுப் பொருட்களின் விலை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான காலநிலை மாற்றத்தின் தாக்கமே இந்த நிலைக்கு உடனடி காரணம்.

இதன்படி பருப்பு விலை 20 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

வெங்காயத்திற்கும் 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு திடீரென தடை விதித்த இந்தியா, கோதுமை மாவு ஏற்றுமதிக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது. 

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளாக உலக சந்தையில் 40 சதவீத அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. 

சர்க்கரை மற்றும் வெங்காயம் ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. உலக விவசாய வர்த்தகத்தில் முதன்மையான நாடுகளில் ஒன்றான இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு உலக உணவுச் சங்கிலியையும் பாதிக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்