சாக்லேட் பிரவுனி
14 ஆவணி 2024 புதன் 07:58 | பார்வைகள் : 622
இனிப்பு என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நமது அனைவரது வீடுகளும் இனிப்பு இல்லாத பண்டிகை நாட்களை பார்த்திருக்க முடியாது. லட்டு, ரசகுல்லா, குளோப் ஜாமுன், கேக் என அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். சாக்லேட் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்று பிரவுனி. இந்த சுவையான பிரவுனியை நமது வீடுகளிலேயே எளிதாக செய்ய முடியும்.
தேவையான பொருட்கள் :
கோகோ தூள் - 2/5 கப்
சர்க்கரை தூள் - 1 1/2 கப்
முட்டை வெள்ளைக்கரு - 2
செய்முறை :
முதலில் உங்கள் ஓவனை 350°Farheneit (176.7° செல்சியஸ்)க்கு முன்கூட்டியே சூடாக்கவும். இதற்கிடையில் உங்கள் பேக்கிங் ட்ரேயில் காகிதம் வைத்து தயார் நிலையில் வைக்கவும். சுவையான பிரவுனியை பெற நீங்கள் சிறந்த தரமான கோகோ பவுடரைக் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே அதன் தரத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டாம்.
ஒரு பெரிய கிண்ணத்தில் 2/5 கப் இனிக்காத கோகோ தூள் மற்றும் 1 1/2 கப் தூள் சர்க்கரை சேர்க்கவும். இவற்றை நன்கு கலக்கவும். பின்னர் இந்த கலவையுடன் முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து, மாவு மென்மையாகவும், கெட்டியாகவும் மாறும் வரை நன்கு கிளறவும். இப்போது தயாரான பிரவுனி கலவையை காகிதத்தால் மூடப்பட்ட பேக்கிங் தட்டில் ஊற்றவும். சுமார் 25 நிமிடங்கள் ஓவனில் வைத்து விடவும்.
பின்னர் ஓவனை அணைத்து கேக் வெந்துவிட்டதா என சரிபார்க்கவும். மாவு வெந்து இருக்க வேண்டும் ஒட்டினால் வேகவில்லை என்று பொருள். இதற்கு நீங்கள் ஒரு டூத்பிக் அல்லது கத்தியை கூட பயன்படுத்தலாம். வெளிப்புற விளிம்புகள் மிருதுவாகவும் பழுப்பு நிறமாகவும் இருக்கும் போது பிரவுனிகள் தயாராக இருக்கும். ஓவன் இல்லாதவர்கள் இதனை குக்கரில் செய்யலாம் . குக்கரில் ஒரு தட்டை வைத்து அதில் இந்த கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக வைத்து எடுத்தாலும் சுவையான பிரவுனி தயார்.