கல்வியாண்டு திரும்பும் மாணவர்களின் உபகரணங்கள் விற்பனையில் வீழ்ச்சி. Familles de France.
14 ஆவணி 2024 புதன் 08:25 | பார்வைகள் : 11715
எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி 2024/2025 ஆண்டுக்கான கல்வியாண்டு ஆரம்பமாகிறது. கோடை விடுமுறையை முடித்துக்கொண்டு மாணவர்கள் பாடசாலைகளுக்கு திரும்பவுள்ளனர். இந்த நிலையில் பாடசாலைகளுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்யும் இந்த காலப்பகுதியில் அதன் விற்பனையில் கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஐம்பது சதவீத வீழ்ச்சி காணப்படுவதாக, குடும்பங்களை கண்காணிக்கும் அமைப்பான 'Familles de France' எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த 'Familles de France' அமைப்பு தாம் நடத்திய ஆய்வின் படி எந்தெந்த கடைகளில் பாடசாலை பொருட்களை மலிவான விலையில் பெறமுடியும் எனும் தகவலை வெளியிட்டுள்ளது. அதன் படி ஒரு 5ம் தர வகுப்பு மாணவனுக்கும் 'Hypermarché' (பெரும் அங்காடிகள்) கடைகளில் 209,37 euros க்கு கொள்வனவு செய்யும் உபகரணங்கள் 'supermarchés' (சிறிய அங்காடிகள்) கடைகளில் 216,82 euros ஆகவும், magasins spécialisés (பாடசாலை பொருட்களுக்கான சிறப்பு கடைகள்) 255,15 euros ஆகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளது.
அதேவேளை பெரும் நோய்த்தொற்று காலத்தின் பின்னரான ஆண்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரண பொருட்களின் விலையில் 1.7% சதவீதம் விலை வீழ்ச்சி காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள 'Familles de France' அமைப்பு இதுவரை பாடசாலை திரும்புவதற்கு அரசு வழங்கும் உதவித்தொகையை பெறாதவர்கள் 'allocations familiale' நிறுவனத்தை நாடுமாறும் அறிவுறுத்தியுள்ளது
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan