■ Saint-Denis : வீடொன்றில் இருந்து வெடிகுண்டுகள், ஆயுதங்கள் மீட்பு!!

14 ஆவணி 2024 புதன் 09:35 | பார்வைகள் : 11263
Saint-Denis நகரில் உள்ள வீடொன்றில் இருந்து வெடிகுண்டுகள் , ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று ஓகஸ்ட் 13, செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணி அளவில் Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றுக்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர் அங்கு மறைத்து வைத்திருந்த வெடிபொருட்களை மீட்டனர். ஆறு கிலோ எடையுள்ள வெடிப்பொருட்களும், இரண்டு துப்பாக்கிகளும், சில துப்பாக்கி சன்னங்களும் அதில் இருந்துள்ளன.
குறித்த வீட்டில் வசித்த நபர் தப்பி ஓடியுள்ள நிலையில், அவர் தேடப்பட்டு வருகிறார். அவர் குடும்ப வன்முறை ஒன்றில் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025