அஜித் விஜய் பற்றி மனம்திறந்த வெங்கட் பிரபு

14 ஆவணி 2024 புதன் 15:50 | பார்வைகள் : 3212
நடிகர் விஜய்யும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் முதன்முறையாக இணைந்து பணியாற்றி உள்ள திரைப்படம் கோட். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 20 நாட்களே எஞ்சி உள்ள நிலையில், அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, கோட் படம் பற்றி வார இதழ் ஒன்றிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிந்துள்ளார்.
மங்காத்தா படத்தில் பணியாற்றும்போதே, அடுத்து விஜய் கூட படம் பண்ணுனு வெங்கட் பிரபுவிடம் சொல்வாராம் அஜித். கோட் படம் பண்ணுவதை பற்றி சொன்னதும் நான் எவ்வளவு நாளா சொல்லிட்டு இருக்கேன், நல்லா பண்ணுனு வாழ்த்தியதோடு, மங்காத்தா மாதிரியே கோட் படமும் 100 மடங்கு இருக்கனும்டானு வாழ்த்தினார். அஜித் சார் சொன்னபடியே நானும் படம் பண்ணிருக்கேன்னு நினைக்குறேன்.
கொஞ்ச நாள் முன்னாடி அஜித்துக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது அவரை சந்தித்திருக்கிறார் வெங்கட் பிரபு. அப்போது, அஜித் அண்ணாவை பார்க்க போறேன்னு விஜய்யிடம் கூறி இருக்கிறார். போனதும் போன் போட்டுக் கொடுனு விஜய் சொன்னாராம். அவர் சொன்னபடியே வெங்கட் பிரபுவும் போன் போட்டு கொடுத்திருக்கிறார். இருவரும் ரொம்ப இயல்பாக அதே நட்புடன் பேசிக்கொண்டார்கள் என வெங்கட் பிரபு கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜய்யின் சினிமா பயணத்திற்கு Farewell மாதிரி இந்த கோட் படம் இருக்கும் என தெரிவித்தார். படம் விஜய்க்கும் மிகவும் பிடித்துவிட்டதாம். ஒரு படத்தை பற்றி விஜய் இவ்வளவு பேசிக் கேட்டது இல்லை என அவரது டீமே வெங்கட் பிரபுவிடம் சொன்னார்களாம். இதைக்கேட்ட வெங்கட் பிரபு, விருதுகளைவிட இது தனக்கு சந்தோஷத்தைக் கொடுத்ததாக கூறி இருக்கிறார்.
பவதாரிணி குரல் பயன்படுத்தப்பட்டது பற்றி பேசிய அவர், சின்ன சின்ன கண்கள் பாடல் கம்போஸ் செய்து முடித்த அன்று தான் பவதாரிணி இறந்ததாகவும், அதன்பின்னர் வேறொரு பாடகியை பாட வைத்து அதை பவதாவின் குரலாக ஏஐ மூலமாக மாற்றினோம். அதைக் கேட்டதும் அந்தப் பாடலை தானும் பாடுவதாக தாமாக முன்வந்தாராம். கரும்பு தின்ன கூலியானு நானும் ஓகே சொன்னேன் என வெங்கட் பிரபு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.