Paristamil Navigation Paristamil advert login

அடுத்த ஆண்டு முதல் பிரான்சில் 'cigarette électronique' க்கு தடை! பிரதமர் Mme Elisabeth Borne.

அடுத்த ஆண்டு முதல் பிரான்சில் 'cigarette électronique' க்கு தடை! பிரதமர் Mme Elisabeth Borne.

3 புரட்டாசி 2023 ஞாயிறு 15:53 | பார்வைகள் : 5324


இன்று ஞாயிற்றுக்கிழமை RTL என்னும் ஊடகத்துக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை வழங்கிய பிரதமர் Mme Elisabeth Borne அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் பற்றிய பல கேள்விகளுக்கு விடையளித்தார்.

'கடந்த ஆண்டு அரசு புகையிலையில் ஆன பொருட்களில் வரிவிதிப்பை அதிகரித்தது; இதனால் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது' என தெரிவித்தார்.

அப்போ இவ்வாண்டும் புகையிலையின் வரிவிதிப்பை அதிகரிப்பீர்களா? என கேள்கப்பட்ட கேள்விகளிற்க்கு...

'இதுவரை அந்த உத்தேசம் அரசிடம் இல்லை ஆனால் புகைப்பிடித்தலால் ஆண்டு ஒன்றுக்கு பிரான்சில் சுமார் 75 000 உயிர்கள் பறிபோகிறது இதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் ' என்றார்.

இளையோர் மத்தியில் இன்று அதிகமாக காணப்படும் 'Puff' எனும் பாவித்த பின்னர் தூக்கி வீசப்படும் 'cigarette électronique'க்கு 2024ம் ஆண்டு பிரான்சில் தடை விதிக்கப்படும் என தெரிவித்த பிரதமர், இந்த சிகரெட்டுக்கு பாவிக்கப்படும் Plastic,  மற்றும் Lithiumயால் ஆன Batteryகள் மீள் சுழற்சி இன்றி சூழலை மாசுபடுத்தும் எனவும் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்