பங்களாதேஷில் நடந்தது என்ன? நடப்பது என்ன? போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன?
14 ஆவணி 2024 புதன் 19:46 | பார்வைகள் : 1446
பங்களாதேஷில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் 42 பேர் உட்பட 450 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டு, பதினைந்து ஆண்டுகள் ஆட்சி நடத்திய 76 வயதான பிரதமர் Sheikh Hasina நாட்டைவிட்டு தப்பியோடி, புதிய தற்காலிக பிரதமராக நோபல் பரிசு பெற்ற 84 வயதான Muhammad Yunus பதவி ஏற்றுள்ள நிலையில் நாட்டின் நிலமை மெல்ல மெல்ல வளமைக்கு திரும்பி வருகிறது.
பொது போக்குவரத்துகள் இயங்கத் தொடங்கியுள்ளது, காவல்துறை, நீதிமன்றம், அரச அலுவலகங்கள் தங்களின் பணிகளை மெல்ல ஆரம்பித்துள்ளனர், இருப்பினும் அங்கு வாழும் சிறுபான்மை இனமான இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.
நாட்டைவிட்டு தப்பியோடி முன்னாள் பிரதமர் Sheikh Hasina கட்சியை சிறுபான்மை இனமான இந்துக்கள் ஆதரிப்பதாக, பெரும்பாண்மை இனமான முஸ்லிம்கள் குற்றம் சாட்டி வருவதனால் அங்காங்கே அவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் "நாட்டுமக்கள் அனைவரும் சமமாக வாழ, வழிசமைக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்" என இன்றைய பிரதமர் Muhammad Yunus அழைப்பு விடுத்துள்ளார் எனும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அங்கு மாணவர் போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படை காரணம் என்ன? அங்கு போராட்டம் முழுமையாக தணிந்து விட்டதா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்த பதிவு.