Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் 16 வட்டாரத்தில் தீ.. இருவர் காயம்!

பரிஸ் 16 வட்டாரத்தில் தீ..  இருவர் காயம்!

14 ஆவணி 2024 புதன் 18:58 | பார்வைகள் : 1128


பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள கடிடம் ஒன்றில் திடீரென தீ பரவியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று ஓகஸ்ட் 14, புதன்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 ஆம் வட்டாரத்தின் Quai Louis-Blériot பகுதியில் உள்ள 14 அடுக்கு குடியிருப்பு கட்டிடத்தின் 13 ஆவது தளத்தில் இந்த தீ பரவல் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 

தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். 50 தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைத்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்