Paristamil Navigation Paristamil advert login

அத்திக்கடவு - அவிநாசி திட்ட கனவு நிறைவேறுகிறது! வரும் 17ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கம்

அத்திக்கடவு - அவிநாசி திட்ட கனவு நிறைவேறுகிறது! வரும் 17ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கம்

15 ஆவணி 2024 வியாழன் 02:35 | பார்வைகள் : 488


நீண்டகால இழுபறிக்கு பின், அத்திக்கடவு - அவிநாசி நீரேற்றும் திட்டத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, 17ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.

பவானி ஆற்று நீரை ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், அத்திக்கடவு - அவிநாசிநீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள், 60 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

அ.தி.மு.க., ஆட்சியில், 2019 டிசம்பரில் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடந்து வந்தன. ஈரோடு, காளிங்கராயன் அணைகட்டில் இருந்து 1,065 கி.மீ.,க்கு ராட்சத குழாய் வாயிலாக, நீரை பம்பிங் செய்து எடுத்து சென்று, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மீண்டும்பவானி ஆற்றில் விடும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் 1.50 டி.எம்.சி., நீர், குழாயில் எடுத்து செல்லப்படவுள்ளது.

இதற்காக, பவானி, நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னுார் ஆகிய 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காளிங்கராயன் அணைகட்டிற்கு அருகே பிரதான நீரேற்று நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மூன்று மாவட்டங்களில் உள்ள 1,045 வறட்சியான நீர்நிலைகளுக்கு நீர் செல்லவுள்ளது. இப்பணிக்கு 1,916 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. ராட்சத குழாய்களை பூமிக்கடியில் கொண்டு செல்வதற்கு நிலம் கொடுத்த 1,600க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, 9.83 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டி உள்ளது. இதனால், பணிகள் முடிந்தும் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு செல்வதில் இழுபறி நீடித்து வந்தது.

தற்போது, இப்பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஆவணி 1ம் தேதியான வரும் 17ம் தேதி, இத்திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, முதல்வர்ஸ்டாலின் அர்ப்பணிக்கவுள்ளார். இதற்கு வசதியாக, காளிங்கராயன் அணைகட்டில் இருந்து வினாடிக்கு 469 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்