Paristamil Navigation Paristamil advert login

சுதந்திர தின கோலாகலம்; டில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

சுதந்திர தின கோலாகலம்; டில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

15 ஆவணி 2024 வியாழன் 02:36 | பார்வைகள் : 1153


நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா, உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. டில்லி செங்கோட்டையில், பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

டில்லி, செங்கோட்டையில் இன்று (ஆகஸ்ட் 15) 78வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து 11ம் முறையாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிய பெருமையை பெற்றார்.

சாகச நிகழ்ச்சிகள்
முப்படை வீரர்கள், துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. ராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார்.

பாதுகாப்பு
சுதந்திர தினம் முன்னிட்டு தேசிய தலைநகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் , 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும்
நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தின கொடியேற்று விழா உற்சாகமாக நடந்தது. அந்தந்த மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றி வைத்து கொண்டாடினர்.

மோடி வாழ்த்து
இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்! என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, அவர் டில்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அமெரிக்கா வாழ்த்து
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியதாவது: சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கும், உலகில் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் அமெரிக்கா சார்பில், சுதந்திர தின வாழ்த்துக்கள். அமெரிக்கா, இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான உறவு வலுவானது. காலநிலை முதல் விண்வெளி தொழில்நுட்பம் வரை இருதரப்பு உறவு முன்பை விட மிகவும் வலுவானது என்றார்.

ஜொலித்தன அரசு கட்டடங்கள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பல அரசு அலுவலக கட்டடங்கள் இந்திய தேசிய கொடியின் மூன்று வண்ணங்களால் ஒளிரச் செய்யப்பட்டன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்